×

கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: கலெக்டர் அருணா தகவல்

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்ட அறிவிப்பு: முன்னாள் முதல்வர் கலைஞரின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அதன்படி இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வட சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரம் அர்த்தன் ரோட்டில் உள்ள சென்னை உருது தொடக்கப்பள்ளியில் நடக்கிறது. 5ம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை திருவிக நகர் பல்லவன் சாலை சென்னை தொடக்கப் பள்ளியிலும், 12ம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை கொளத்தூர் பந்தர் கார்டன் தெரு சென்னை மேல்நிலைப்பள்ளியிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் இதுநாள் வரை தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, புகைப்படம் -4, ஆகியவற்றுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான அரசு திட்டங்களில் பயனடைய ஏதுவாக அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொள்வதால் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் விண்ணப்பித்து பயனடையலாம்.

The post கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: கலெக்டர் அருணா தகவல் appeared first on Dinakaran.

Tags : Collector Aruna ,Chennai ,Chennai District ,Collector ,Aruna ,chief minister ,Dinakaran ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு...