சென்னை: சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பம், டோக்கன் விநியோகம் தொடங்கியது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான டோக்கன்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக்கடை பணியாளர்கள் மூலம் இன்று முதல் தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை 15 மண்டலங்களிலும் தனித்தனியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு வீடு தேடி சென்று கூட்டுறவுத்துறை மற்றும் தன்னார்வலர்கள் கொடுத்து வருகின்றனர். இரண்டு கட்டமாக சென்னையில் மொத்தமாக 1,428 நியாய விலை கடைகள் மூலமாக கலைஞர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக 98 வார்டுகளில் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக 102 வார்டுகளிலும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடக்கிறது.இப்பணியில் 3,473 ஊழியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.மேலும், சென்னை காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
The post கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பம், டோக்கன் சென்னையில் விநியோகம் appeared first on Dinakaran.