×

செயற்கை நுண்ணறிவு மூலம் கேரளாவில் மோசடி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பாலாழி பகுதியை சேர்ந்த 71 வயதான ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் ஒருவருக்கு வாட்ஸ் ஆப் மூலம் ஒரு தகவல் வந்தது. அதில், நண்பர் என்றும் மும்பையிலுள்ள தன்னுடைய தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் உடனடியாக ரூ.40 ஆயிரம் பணம் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்ட சிறிது நேரத்தில் முதியவருக்கு ஒரு வீடியோ கால் வந்தது. அதில் அந்த முதியவரின் நண்பர் தான் பேசினார். இதனால் நண்பர் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு ரூ.40 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தார். ஆனால் வீடியோ கால்செயற்கை நுண்ணறிவு மூலம் மோசடி என்பது தெரியவந்ததால் போலீசில் புகார் செய்தார்.

The post செயற்கை நுண்ணறிவு மூலம் கேரளாவில் மோசடி appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Palazhi ,Kozhikode, Kerala ,
× RELATED ஏழைகளுக்கு இடத்தை வழங்கினால் கடவுளே...