×

திமுக சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள் நியமனம்

காஞ்சிபுரம்: திமுக சுற்றுச்சூழல் அணி சார்பாக மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்களின் 2வது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தின் தலைவராக முருகன், துணை தலைவராக பிரசாத், அமைப்பாளராக கே.ஆர்.ஆனந்தன், துணை அமைப்பாளர்களாக முனிரத்தினம், சந்தோஷ்கண்ணன், உமாசங்கர், டேனியல் சந்துரு, ராஜன், பெருமாள், வாசிம்ராஜா ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post திமுக சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : DMK Environment ,Kanchipuram ,DMK ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் மாநகராட்சி குழு...