தேவையானவை:
மைதா மாவு – 2 கப்,
சர்க்கரை – 1 டீஸ்பூன்,
உப்பு – கால் டீஸ்பூன்,
ஆப்பிள் – 1,
மாதுளை முத்துக்கள் – 1 கப்,
ஃப்ரூட் ஜாம் -1 கப்,
துருவிய சீஸ் – 1 கப்.
செய்முறை:
ஆப்பிளைத் தோல் சீவி சன்னமாக அரைபட்ட ஸ்லைசாக வெட்டவும். மைதாவில் உப்பையும், சர்க்கரையையும் சேர்த்து தேவையான நீர் ஊற்றி தோசைமாவு பதத்தில் கரைக்கவும். நான்ஸ்டிக் பானில் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி உடனே மெல்லிய தோசைகளாக சுடவும். சிறிது சீஸை தூவி அதில் மெல்லிய ஸ்லைசான 6 ஆப்பிளை அடுக்கி ஜாமை தடவி அதன் மேல் மாதுளை தூவவும். ஆப்பிளும், மாதுளையும் தெரிவது போல அரை வட்டமாக மடக்கி எடுத்து சாப்பிடவும்.
The post ஆப்பிள் பான் கேக் appeared first on Dinakaran.