×

அதிகாரம் இருப்பதால் யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாமா? அண்ணாமலை அளந்து பேசவேண்டும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

திண்டுக்கல்: டெல்லியில் அதிகாரம் இருப்பது என்பதற்காக யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாமா? அண்ணாமலை அளந்து பேச வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்து உள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில், வத்தலக்குண்டு பைபாஸ், சீலப்பாடி, காட்டாஸ்பத்திரி உள்ளிட்ட 10 இடங்களில் கட்சிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு கட்சிக் கொடி ஏற்றி வைத்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் பாஜ தமிழகத்திற்காக ஒரு புதிய திட்டத்தைக் கூட கொண்டு வரவில்லை. எல்லா திட்டங்களும் வட மாநிலங்களுக்கு தான் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கி ஏழு ஆண்டுகள் ஆகிறது. இதுவரை சுற்றுச்சுவர் மட்டுமே இருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தை பாஜ புறக்கணிப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

செந்தில்பாலாஜி விவகாரத்தைப் பொறுத்தவரை, டெல்லியில் அதிகாரம் இருப்பது என்பதற்காக யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாமா? அண்ணாமலை அடிக்கடி வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். அதற்கு காரணம் இங்கே இருக்கிற பணத்தை சுவிஸ் பேங்க்கில் போடுவதற்காக என்று சொல்றேன். இது அரசியல் ஆயிடுமா? இதனால் யாருக்கு என்ன பலன்? அண்ணாமலை அளந்து பேசவேண்டும். பாஜ அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இருக்கின்றனர். மோடி ஒன்பது வருடத்தில் எதையுமே சாதிக்கவில்லை. பாஜவின் சாதனையை சொல்லி ஓட்டு கேட்க முடியாதவர்கள், ஜாதியை சொல்லி ஓட்டு கேட்க நினைக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

The post அதிகாரம் இருப்பதால் யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாமா? அண்ணாமலை அளந்து பேசவேண்டும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Annamalai ,KS ,Azhagiri ,Dindigul ,Delhi ,Alagiri ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் மது விலக்கு 100 சதவீதம் சாத்தியமில்லை: அண்ணாமலை திட்டவட்டம்