×

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் எம்.பி.யின் மனைவி, மகன், ஆடிட்டரை கடத்தி ₹50 கோடி கேட்டு மிரட்டல்: 3 பேரும் மீட்பு

திருமலை: விசாகப்பட்டினம் எம்.பி.யின் மனைவி, மகன், ஆடிட்டரை கடத்தி ₹50 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்களை 17 தனிப்படை அமைத்து மூவரையும் பத்திரமாக மீட்டனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் எம்.வி.வி.சத்தியநாராயணா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மக்களவை எம்.பியாக உள்ளார். இவர் ஐதராபாத் சென்று இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சில மர்ம நபர்களால் எம்பியின் மகன் சரத் (35) கடத்தப்பட்டார். அதன் பின்னர் எம்.பி.யின் மனைவி ஜோதிக்கு, போன் செய்து உங்கள் மகன் கடத்தப்பட்டு இருப்பதாகவும் உடனடியாக தங்கள் இருப்பிடத்துக்கு ₹50 கோடி பணத்துடன் வரும்படி செல்போனில் லோகேஷன் அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து எம்.பி.யின் மனைவி ஜோதி(55) அங்கு சென்றார். அவரையும் கடத்தல்காரர்கள் பிடித்து வைத்துக்கொண்டனர். பின்னர் எம்.பி. சத்யநாராயணாவின் ஆடிட்டர் கன்னமனேனி வெங்கடேஸ்வராவுக்கு போன் செய்த மர்மநபர்கள் எம்.பி.மனைவி, மகன் கடத்தப்பட்டதை கூறி தங்கள் இடத்திற்கு பணம் கொண்டு வருமாறு மிரட்டியுள்ளனர். இதை அடுத்து ஆடிட்டர் வெங்கடேஸ்வர ராவ் தன்னிடம் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு கடத்தல்காரர்கள் கூறிய இடத்திற்கு சென்றார்.

அதற்குள் இந்த கடத்தல் குறித்து அறிந்த எம்.பி. சத்தியநாராயணா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் டி.ஜி.பி. ராஜேந்திரநாத் 17 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். இதற்கிடையே கடத்தல்காரர்கள் பணம் பெற்றுக் கொண்டு 3 பேரையும் விடுவித்தனர். இந்த கடத்தலுக்கு ₹50 கோடி பணம் கேட்டு பேரம் நடைபெற்றதை அறிந்த போலீசார் 3 பேரும் பாதுகாப்பாக உள்ளதை முதலில் உறுதி செய்து கொண்டனர்.
பின்னர் விசாரணை நடத்தினர். அதில் அவர்களை கடத்தியது பிரபல ரவுடி ஹேமந்த் என்று தெரியவந்தது. கடத்தலில் ஈடுப்பட்ட ஹேமந்த் உள்பட நான்கு பேரை நேற்று காலை கைது செய்தனர்.

The post ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் எம்.பி.யின் மனைவி, மகன், ஆடிட்டரை கடத்தி ₹50 கோடி கேட்டு மிரட்டல்: 3 பேரும் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Visakhapatnam ,Thirumalai ,Dinakaran ,
× RELATED விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில்...