×
Saravana Stores

ஆண்டாள் கோயிலில் வருஷாபிஷேகம்: திருமுக்குள தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம்

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வருஷாபிஷேக விழா 3 நாட்கள் நடைபெறும். இதன்படி இந்தாண்டு வருஷாபிஷேக விழா இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி முதல் நாளான இன்று மகா சாந்தி ஹோமம், இரண்டாம் நாளான நாளை 108 கலசாபிஷேகம், மூன்றாம் நாள் விசேஷ திருமஞ்சனம், லட்சார்ச்சனை ஆகியவை நடைபெறும்.

வருஷாபிஷேகத்தையொட்டி முதல் நாளான இன்று காலை மகாசாந்தி ஹோமத்துடன் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகளும் தீபஆராதனை நடைபெற்றது. பின்னர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளத்தில் இருந்து யானையில் தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி சர்வ அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் காட்சியளித்தனர். கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா, அறங்காவலர்கள், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். வருஷாபிஷேகத்தை காண இன்று காலை கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

The post ஆண்டாள் கோயிலில் வருஷாபிஷேகம்: திருமுக்குள தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Varushabhishekam ,Andal Temple ,Tiruvilliputhur ,Virudhunagar district ,Varushabishek festival ,Varushabishek ,Maha Shanti ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்...