×

தமிழ்நாட்டில் இருந்து என்எல்சியை வெளியேற்ற அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: என்எல்சி நிறுவனத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு தேவைக்கும் கூடுதலாக உள்ள மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யும் அளவுக்கு மின்மிகை மாநிலமாக மாறியிருப்பதாகவும், கடந்த 19ம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் 26 லட்சம் யூனிட் மின்சாரம் ஒரு யூனிட் ரூ.9.76 என்ற விலைக்கு சந்தை மூலம் விற்கப்பட்டிருப்பதாகவும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கிறார். வெளிச் சந்தையில் மின்சாரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்யும் அளவுக்கு தமிழ்நாட்டின் மின்நிலைமை மேம்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு, தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த மின்னுற்பத்தி நிறுவு திறன் 36,000 மெகாவாட் என்பதையும், தமிழ்நாட்டின் அதிகபட்ச மின்சாரத் தேவை 18,000 மெகாவாட் முதல் 19,000 மெகாவாட் வரை மட்டும் தான் என்பதை கடந்த ஓராண்டிற்கும் மேலாக தெரிவித்து வருகிறேன். மின்உற்பத்தியில் என்.எல்.சியின் பங்களிப்பு 407 மெகாவாட், அதாவது 2.34 சதவீதம் மட்டும் தான். மின்தேவை 20 சதவீதம் வரை அதிகரித்தால் கூட அதை எதிர்கொள்ளும் திறனும், கட்டமைப்பும் தமிழ்நாடு மின் வாரியத்திடம் இருக்கிறது. எனவே, என்.எல்.சி நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டால் அடுத்த சில ஆண்டுகளில் கடலூர் மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும். எனவே, என்.எல்.சி நிறுவனத்தை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

The post தமிழ்நாட்டில் இருந்து என்எல்சியை வெளியேற்ற அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Annpurani ,NLC ,Tamil Nadu ,Chennai ,Anhumurani ,Tamil Nadu government ,Bambaka ,President ,Annimmani ,Anbaramani ,Dinakaran ,
× RELATED என்எல்சி சுரங்கத்தின் மண்ணுடன்...