×

அமித்ஷா ஹெலிகாப்டரில் தேர்தல் படை சோதனை

மும்பை: மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரம் செய்யச் சென்ற அமித்ஷா ஹெலிகாப்டரில் தேர்தல் படை சோதனை நடத்தியது. மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவ.20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு ஹிங்கோலி தொகுதியில் நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் செய்தார். அப்போது அவரது ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த வீடியோவை அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,’ ஹிங்கோலி தொகுதி தேர்தல் பிரசாரத்தில் எனது ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நேர்மையான தேர்தல் நடைமுறையை பா.ஜ நம்புகிறது. ஆரோக்கியமான தேர்தல் நடைமுறைக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்தியாவை உலகின் வலிமையான ஜனநாயக நாடாக வைத்து இருப்பதில் நாம் நமது கடமைகளை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post அமித்ஷா ஹெலிகாப்டரில் தேர்தல் படை சோதனை appeared first on Dinakaran.

Tags : Amitsha ,MUMBAI ,Election Force ,Amit Shah ,Maharashtra ,Maharashtra Legislative Assembly ,Union Home Minister ,Hingoli ,Dinakaran ,
× RELATED அமித்ஷாவை கண்டித்து சென்னை மாவட்ட காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்