×

பள்ளி வேன் டிரைவரை கொன்ற 108 ஆம்புலன்ஸ் டிரைவர் கைது: பரபரப்பு வாக்குமூலம்

சத்தியமங்கலம்:ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்துள்ள சாணார்பதியை சேர்ந்தவர் மாரிமுத்து(37). விண்ணப்பள்ளியில் உள்ள தனியார் பள்ளி வேன் டிரைவர். இவரது மனைவி கல்யாணி(33). சத்தி அரசு மருத்துவமனை நர்சு. இவர்களது மகள் காருண்யா(13). இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சத்தி-கோவை நெடுஞ்சாலை அருகே உள்ள ஒரு மண் சாலையில் மாரிமுத்து, தன் பைக் அருகே இறந்து கிடந்தார். இதுகுறித்து சத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

அதில் மாரிமுத்துவின் நண்பரான கொமாரபாளையத்தை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மோகன்(37) மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாரிமுத்துவை கொலை செய்ததை மோகன் ஒப்புக்கொண்டார்.இதுகுறித்து மோகன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: நானும், மாரிமுத்துவும் 6 ஆண்டு நண்பர்கள். என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்தார். அவரின் மனைவி கல்யாணிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் எனது கணவர் அடிக்கடி குடித்துவிட்டு தகராறு செய்வதாகவும், போனில் பல பெண்களுடன் பேசி வருவதாகவும் கூறி வருத்தமடைந்தார்.

மேலும் வீட்டில் நிம்மதியில்லை. அவரால் பெரும் தொல்லையாக இருக்கிறது. அவரை விவாகரத்து செய்யப் போகிறேன் என்று கூறினார்.இதனைகேட்ட நான் சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த மாரிமுத்துவை காரில் அழைத்துச்சென்று இரும்பு கம்பியால் நெற்றியில் அடித்துக்கொலை செய்தேன்.

பின்னர் பைக்கில் இருந்து விழுந்து விபத்தில் இறந்ததாக செட்அப் செய்துவிட்டு வந்துவிட்டேன். விபத்து வழக்காக மாறும் என்று நினைத்து இருந்தேன். ஆனால் போலீசில் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர்.இதனையடுத்து போலீசார் மோகனை கைது செய்து, கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பள்ளி வேன் டிரைவரை கொன்ற 108 ஆம்புலன்ஸ் டிரைவர் கைது: பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Marimuthu ,Chanarpati ,Puliambatti ,Erode district ,Awadalli ,Dinakaran ,
× RELATED தாளவாடி அருகே மாங்காய்களை பறிக்க...