×

கூட்டணி குறித்து நாங்கள் கருத்து கூற முடியாது: தேசிய தலைமை முடிவு செய்யும்.! வானதி சீனிவாசன் பேட்டி

சென்னை: பாஜவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்துள்ள நிலையில், இதுகுறித்து தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக உடன் இனி கூட்டணி இல்லை என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் முடிவெடுத்தனர்.

இது தொடர்பான தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்மொழிந்தார். அதனை ஏற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 100-க்கு 100 சதவீதம் ஏகமனதாக அந்த தீர்மானத்தை நிறைவேற்றினர். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2024 மக்களவை தேர்தலில் மட்டுமல்ல, 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்றார்.

இந்த நிலையில், கூட்டணி குறித்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியதாவது: கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவு செய்யும். தேசிய தலைமை அறிவிக்கும் வரை, நாங்கள் எந்தவித கருத்தையும் கூற முடியாது. இதுகுறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் எங்களுக்கு அறிவுறுத்தல் தருவார்கள். அ.தி.மு.கவினர் கூட்டணி இல்லை என அறிவித்துள்ளார்கள். ஆனால் அவர்களின் கருத்துக்கு பதில் சொல்ல் எங்களுக்கு அதிகாரம் இல்லை. எனவே கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும். இவ்வாறு கூறினார்.

The post கூட்டணி குறித்து நாங்கள் கருத்து கூற முடியாது: தேசிய தலைமை முடிவு செய்யும்.! வானதி சீனிவாசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Vanathi Srinivasan ,Chennai ,AIADMK ,BJP ,Dinakaran ,
× RELATED கறுப்புப் பணத்தை ஒழிக்கவே ஒரே நாடு ஒரே...