×

விருப்பம் இல்லை என்றால் கூட்டணியைவிட்டு அண்ணாமலை வெளியேறலாம்; அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடும் தாக்கு

சென்னை: விருப்பம் இல்லை என்றால் கூட்டணியைவிட்டு அண்ணாமலை வெளியேறலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுகவை பிடிக்காவிட்டால் அண்ணாமலை விலகிக்கொள்ளலாம். ஊழலை பற்றி பேச அண்ணாமலைக்கோ பா.ஜ.க.வுக்கோ எந்த தகுதியும் கிடையாது. அண்ணாமலை தனி நோக்கத்துடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். நாடாளுமன்ற உறுப்பினராகவோ சட்டமன்ற உறுப்பினராகவோ ஏன் கவுன்சிலராகவோ கூட அண்ணாமலை இருந்ததில்லை. கொலை, பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களுக்கு அண்ணாமலை பதவி கொடுக்கிறார். ஊழலுக்காக கட்சியின் தலைவர் தண்டிக்கப்பட்டார் என்றால் அது பா.ஜ.க. கட்சியில்தான் என்று சி.வி.சண்முகம் விமர்சனம் செய்தார்.

The post விருப்பம் இல்லை என்றால் கூட்டணியைவிட்டு அண்ணாமலை வெளியேறலாம்; அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,AIADMK ,former ,minister ,CV Shanmugam ,Chennai ,CV ,Shanmugam ,Dinakaran ,
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...