×

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு

சென்னை: அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வைகோ வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டாமல், உரிய பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் பணியில் நியமிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். சேலம் சுகவனேஸ்வரர் கோயில் அர்ச்சகர் நியமனத்திற்கு எதிராக சுப்பிரமணிய குருக்கள் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த தீர்ப்பினை அறிவித்துள்ளார். திராவிட மாடல் அரசு நடத்தும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மீண்டும் அர்ச்சகர் சட்டத்திற்கு புத்துயிர் கொடுத்துள்ளது. இந்த சூழலில், தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டத்தக்க தீர்ப்பினை அளித்துள்ளது. அர்ச்சகர் பயிற்சியை முறையாகப் படித்து, அரசு நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி இல்லாமல் வேதனையோடு வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கின்ற அர்ச்சகர்களை தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை உடனடியாக பணியில் நியமிக்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Vaiko ,Madras High Court ,Chennai ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!