×

அம்மையப்பநல்லூர் கிராமத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல கோரிக்கை

உத்திரமேரூர்: அம்மையப்பநல்லூர் கிராமத்தில், அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உத்திரமேரூர் – வந்தவாசி சாலையில் அம்மையப்பநல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 450க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அம்மையப்பநல்லூர் கிராமத்தை ஒட்டியுள்ள பென்னலூர், பூந்தண்டலம், சகாயபுரம், மேல்மா கூட்ரோடு, இரும்பேடு உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் கூட்ரோடாக அம்மையப்பநல்லூர் கிராமம் உள்ளது. இந்த அம்மையப்பநல்லூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், முதியோர், கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் உத்திரமேரூர் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், அம்மையப்பநல்லூர் பேருந்து நிலையத்தில் சில அரசு பேருந்துகள் மட்டுமே நின்று செல்கின்றன. விரைவு பேருந்துகள் ஏதும் நிற்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ – மாணவிகளும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் ஊழியர்களும், முதியோர், கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே, அம்மையப்பநல்லூர் கிராம பேருந்து நிலையத்தில், அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அம்மையப்பநல்லூர் கிராமத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ammaiyappanallur village ,Uthramerur ,Ammaiyappanallur ,Dinakaran ,
× RELATED நவீன விவசாய ஆலோசனை கூட்டம்