×

அனைத்து கட்சி கூட்டத்திற்கு வராமல் பீகார் தேர்தல் பிரசாரத்திற்கு மோடி சென்றது ஏன்..? கார்கே கேள்வி

பெங்களூரு: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று கூறுகையில்,‘‘பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் நான் எழுப்பிய முதல் கேள்வி என்னவென்றால், அரசாங்கம் ஒரு கூட்டத்தைக் கூட்டும்போது, ​​பிரதமர் இருக்க வேண்டும். அவர் கலந்து கொள்ளாததால், அது சரியல்ல என்று கூறினோம். அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பாக பிரதமர் மோடியின் அணுகுமுறை சரி இல்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், தேர்தல் நடைபெறவுள்ள பீகாரில் நடந்த தேர்தல் பேரணியில் அவர் கலந்து கொண்டது கண்டிக்கத்தக்கது.அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றால், அவர் அதில் தீவிரமாக இல்லை என்று அர்த்தம் ’’ என்றார்.

The post அனைத்து கட்சி கூட்டத்திற்கு வராமல் பீகார் தேர்தல் பிரசாரத்திற்கு மோடி சென்றது ஏன்..? கார்கே கேள்வி appeared first on Dinakaran.

Tags : Modi ,Bihar election campaign ,Carke ,Bangalore ,Congress ,Mallikarjuna Karke ,Delhi ,Pahalkam attack ,Bihar election ,Karke ,Dinakaran ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி