×

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மை நிறுவனம் தான்… 1967ல் வழங்கப்பட்ட தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்து அதிரடி!!

புதுடெல்லி: அலிகார் பல்கலைக்கழகம், நாடாளுமன்ற சட்டத்தால் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் என்பதற்காக சிறுபான்மை அந்தஸ்தை மறுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. பழம்பெரும் மத்திய கல்வி நிறுவனமாக இருப்பது அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம். உபியில் அலிகர் நகரில் இது சுமார் 150 வருடங்களுக்கு முன் சர் சையது அகமது கான் என்பவரால் நிறுவப்பட்டது. முஸ்லிம் மாணவ, மாணவிகள் அதிகம் பயிலும் இக்கல்வி நிறுவனத்தில் அவர்களுக்காக ஐம்பது சதவிகித ஒதுக்கீடு இருந்தது. இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

பல வருடங்களுக்கு முன் அலகபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம் சிறுபான்மை கல்வி நிறுவனமாக இருந்தது கிடையாது என தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பின் அமர்வு விசாரணை செய்து வந்தது.சுமார் 18 வருடங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட 4 நீதிபதிகள் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மை நிறுவனம் தான் என்று தீர்ப்பு வழங்கி உள்ளனர். அலிகர் இஸ்லாமிய பல்கலைக்கு சிறுபான்மை அந்தஸ்தை மறுக்க முடியாது. நிறுவனம் சிறுபான்மையினரின் நலனுக்காக செயல்படுகிறதா என்பதுதான் முக்கியம் என்றும் இவர்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.சிறுபான்மை கல்வி நிறுவனம் என்பதை எந்த அடிப்படையில் முடிவு செய்யலாம் என்பதற்கான விளக்கங்களை தெளிவு படுத்தி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதன் மூலம் சட்டம் ஒன்று அமலுக்கு வந்தால் சிறுபான்மை அந்தஸ்து என்பது ரத்தாகிவிடும் என்று அஜீஸ் பாஷா வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் ரத்து செய்தனர். சிறுபான்மை கல்வி நிறுவனம்தான் என தீர்ப்பளிக்கப்பட்டதால் 50 சதவீத இடங்களை சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்க முடியும் என்று குறிப்பிடத்தக்கது. மேலும் அலிகர் பல்கலை. உண்மையில் இஸ்லாமியர் ஒருவரால் தொடங்கப்பட்டதா என வழக்கமான அமர்வு விசாரிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அலிகர் பல்கலை. வழக்கில் 3 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

The post அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மை நிறுவனம் தான்… 1967ல் வழங்கப்பட்ட தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்து அதிரடி!! appeared first on Dinakaran.

Tags : Aligarh Muslim University ,Supreme Court ,New Delhi ,Aligarh University ,Aligarh ,Ubi ,Dinakaran ,
× RELATED காலி மருத்துவ இடங்களை வரும் 30க்குள்...