×

விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த அழகு முத்துக்கோனின் வாழ்வும் போராட்டமும் என்றும் புகழ்மங்காது ஒளிவீசிடும் : தலைவர்கள் வாழ்த்து!!

சென்னை : அழகுமுத்துக்கோனின் 266-வது பிறந்த நாளை யொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அழகு முத்துக்கோன் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதுக்குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நிலத்தின் தலைவணங்கா வீரத்துக்கும் தலைசான்ற தியாகத்துக்கும் தன்னிகரற்ற அடையாளமாக விளங்கும் மாவீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாள். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இந்தியாவின் பல பகுதிகளும் கிளர்ந்தெழுவதற்கு முன்பே அதைச் செய்து, விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த அழகு முத்துக்கோனின் வாழ்வும் போராட்டமும் என்றும் புகழ்மங்காது ஒளிவீசிடும்! என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் , “ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து, இன்னுயிரை தியாகம் செய்த விடுதலைப் போராட்டத் தலைவர் மாவீரன் அழகுமுத்துக் கோனின் 313-வது பிறந்தநாளும், 266-வது குருபூஜையும் இன்று. ஆங்கிலேயர்களை எதிர்க்க முடியுமா? என மற்றவர்கள் மிரண்டு நின்ற போது, தமது 45-ஆவது வயதில் ஆங்கிலேயப் படைகளை வீழ்த்தியவர் அழகு முத்துக் கோன். தமது 49-ஆவது வயதில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டவர். அந்தப் போரில் அவர் பீரங்கி குண்டுகளை மார்பில் தாங்கி சிதறியவர். மாவீரன் அழகுமுத்துக் கோனின் வீரத்தையும், தியாகத்தையும் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும்!

ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து, இன்னுயிரை தியாகம் செய்த விடுதலைப் போராட்டத் தலைவர் மாவீரன் அழகுமுத்துக் கோனின் 313வது பிறந்தநாளும்,…தாய்நாட்டுப் பற்று எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மாவீரன் அழகுமுத்துக் கோன் சிறந்த எடுத்துக்காட்டு. அவரது வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று சேர்க்க நாம் இந்த நாளில் உறுதியேற்போம். அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம். அவரது வரலாற்றை பாடநூலில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பதிவிட்டுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போர் புரிந்த சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்த நாள் இன்று. எட்டையபுர மன்னரின் முக்கிய தளபதியாகத் திகழ்ந்து, மன்னர்,பாமர மக்கள் உள்ளிட்டோர் மீது போர் தொடுத்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டவர் அழகுமுத்துக்கோன் அவர்கள்.அடிமைப்பட்டு உயிர்வாழ்வதை விட சுதந்திர மனிதனாய் உயிரைவிடுவோம் என வீர முழக்கமிட்ட வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த இந்த நன்நாளில் அவரது விசுவாசம், அர்ப்பணிப்பு, தியாக உணர்வு ஆகியவற்றை நினைவு கூர்ந்து போற்றுவோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,”வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்பாகவே ஆங்கிலேயப் படைகளை எதிர்த்துப் போரிட்டு இந்தியாவின் முதல் விடுதலைப் போரை நடத்திய கட்டாளங்குளம் மன்னன் வீரன் அழகுமுத்துக்கோனின் 313-ஆவது பிறந்தநாள் இன்று. மண்ணையும், மக்களையும் காக்க எந்த எல்லைக்கும் செல்வேன்; எந்த தியாகத்தையும் செய்வேன் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் வீரன் அழகுமுத்துக்கோன். வரும் 19-ஆம் நாள் அவரது 266-ஆவது நினைவுநாள் என்பதால், அதுவும் இன்றே குருபூஜையாக கடைபிடிக்கப்படுகிறது. புனிதமான இந்த நாளில் மாவீரன் அழகு முத்துக்கோனின் வீரத்தையும், விடுதலைவேட்கையையும் நாம் அனைவரும் போற்றுவோம்!”என்று தெரிவித்துள்ளார்.

The post விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த அழகு முத்துக்கோனின் வாழ்வும் போராட்டமும் என்றும் புகழ்மங்காது ஒளிவீசிடும் : தலைவர்கள் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : Muthukkon ,Chennai ,Akhumuthukon ,Chief Minister ,M.K.Stalin ,Egmore, Chennai ,
× RELATED பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை...