×

சென்னையில் ஏப்.16ம் தேதி அதிமுக சார்பில் இப்தார் விருந்து நடைபெறும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: சென்னையில் ஏப்.16ம் தேதி அதிமுக சார்பில் இப்தார் விருந்து நடைபெறும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் இவ்வாண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வருகின்ற 16.4.2023 ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணியளவில், சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் இஃப்தார் விருந்து வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சியில், இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சென்னையில் ஏப்.16ம் தேதி அதிமுக சார்பில் இப்தார் விருந்து நடைபெறும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Chennai ,Edappadi Palaniswami ,General Secretary ,Dinakaran ,
× RELATED சட்டப்பேரவை நடப்பு கூட்டத்தொடர்...