×

அதிமுக பொதுக்குழு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஜூலை பதினொன்றாம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் தீர்மானங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து, அதிமுகவில் இருந்து தங்களை நீக்கியது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடியை தேர்வு செய்தது போன்ற தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபிக் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் ஏழு நாட்கள் நடந்த வழக்கறிஞர்கள் வாதம் கடந்த 15ம் தேதி நிறைவடைந்தது. அப்போது இருதரப்பினரின் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்று இரு தரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனையடுத்து, இருதரப்பினரின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

The post அதிமுக பொதுக்குழு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Chennai ,Supreme Court ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் பெண்களின்...