×

ஓபிஎஸ் அணி கூட்டம் நடத்த உள்ள நிலையில் 5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 5ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் நடைபோட தொடங்கியுள்ளன. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், தனது பலத்தை நிரூபிக்கும் வேலைகளில் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமை அலுவலகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், ஜூலை 5ம்தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு, தலைமை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் அனைத்து தலைமை செயலாளர்களும், மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணியினர் விரைவில் கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே திருச்சியில் மாநாடு நடத்திய நிலையில், அடுத்தகட்டமாக கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்துதான், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூலை 5ல் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளது. ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தும் போதெல்லாம் எடப்பாடி தரப்பும் கூட்டம் நடத்துவது வழக்கம். அந்த வகையில் இப்போதும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஓபிஎஸ் அணி கூட்டம் நடத்த உள்ள நிலையில் 5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK district ,OPS ,Edappadi Palaniswami ,Chennai ,AIADMK ,Dinakaran ,
× RELATED அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக மூத்த...