×

அதிமுக என குறிப்பிட்டு அமித் ஷா அழைப்புவிடுக்கவில்லை: அண்ணாமலை பேட்டி

டெல்லி: அதிமுக என குறிப்பிட்டு அமித் ஷா அழைப்புவிடுக்கவில்லை என டெல்லியில் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். பாஜக கூட்டணி குறித்து இம்மாத இறுதிக்குள் தெளிவான முடிவு கிடைக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை கடைசிநேரத்தில்கூட கூட்டணி முடிவுகள் எடுக்கப்படலாம். அனைத்து கட்சிகளுக்கும் கூட்டணி கதவு திறந்திருப்பதாகவே அமித்ஷா கூறியுள்ளார். மோடி மற்றும் பாஜக தலைமையை ஏற்கும் கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post அதிமுக என குறிப்பிட்டு அமித் ஷா அழைப்புவிடுக்கவில்லை: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,AIADMK ,Annamalai ,Delhi ,BJP alliance ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி?