×

தேர்தலுக்கு 3 மாதத்துக்கு முன் பாஜவுடன் அதிமுக கூட்டணி: சொல்கிறார் ஜி.கே.வாசன்

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று அளித்த பேட்டி: தமிழக முதல்வருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன். அவர் விரைவாக பூரண குணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என வேண்டுகிறேன். டெல்டா விவசாயிகளுக்கு காவிரி நீர் பிரச்னை, பயிர் பிரச்னை மட்டுமல்ல, உயிர் பிரச்னையும் கூட. காவிரி ஆணைய உத்தரவை ஏற்க மறுத்து கர்நாடகா, தமிழகத்துக்கு தண்ணீர்விட மறுப்பது வேதனையை ஏற்படுத்துகிறது. விவசாயிகளில் தமிழக, கர்நாடக விவசாயிகள் என பிரித்து பார்க்க கூடாது. உயர்ந்த மனப்பான்மையுடன் கர்நாடக அரசு செயல்பட வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தமாகா தொடங்கி விட்டது. தீபாவளிக்கு பிறகு மண்டல அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல, ஜனவரியில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். அதிமுக, பாஜ கூட்டணி என்பது தேர்தலுக்கு கடைசி 3 மாதத்தில் எதிர் அணியை வீழ்த்துவது சம்பந்தமாக கலந்தாய்வு நடத்தி தான் தலைவர்கள் முடிவு செய்வார்கள். அதன் அடிப்படையில் 3 மாதங்களுக்கு முன்பு தெரியும். அதிமுகவுடன் கூட்டணி பற்றி தொண்டர்களின் கருத்துகளை தலைவர்கள் கேட்டு முடிவு எடுப்பார்கள் என்றார்.

The post தேர்தலுக்கு 3 மாதத்துக்கு முன் பாஜவுடன் அதிமுக கூட்டணி: சொல்கிறார் ஜி.கே.வாசன் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,GK Vasan ,Muthuppet ,Tamaka ,President ,Muthupet, Thiruvarur district ,Chief Minister of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பாஜ-அதிமுக கூட்டணி பற்றி கேட்காதீங்க…எச்.ராஜா அலறல்