- பூட்டிக் விவசாயிகள் நலத்துறை அலுவலகம்
- மீன்ச்சூர்
- Awadi
- பொன்னேரி
- விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அலுவலகம்
- பூட்டி
- ஆவடி
- தின மலர்
பொன்னேரி: மீஞ்சூரில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலகம் பூட்டியே கிடப்பதால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது. நீண்ட நாட்களாக பூட்டு போட்டு கிடக்கும் இந்த அலுவலகம் எப்பொழுது திறக்கப்படுகிறது, எப்பொழுது மூடப்படுகிறது என தெரியாமல் மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தினமும் இங்கு, வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே அலுவலகம் திறந்திருந்தாலும், கணினி இயக்குபவர் மட்டுமே உள்ளார்.
அவரிடம் புகார் குறித்து கேட்டால் அலுவலர்கள் இல்லை, பயிற்சிக்கு சென்றுள்ளனர் என அலட்சியமாக பதில் அளிக்கிறார். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், அத்துறை அலுவலர்களிடம் கேட்கும்போது, பயிற்சியில் இருப்பதாகவும் இரண்டு நாட்களுக்கு பிறகு அலுவலகம் திறக்கப்படும். எனவே, திங்கட்கிழமை வந்து அலுவலகத்தில் பார்க்கும் படியும் நேரம் காலத்தோடு அப்பாயின்மென்ட் கொடுக்கின்றனர்.
தற்போது, பிரதமரின் விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு திட்டத்தில் பல குளறுபடிகள் இருப்பதால் இது குறித்து, நாங்கள் வந்து இந்த அலுவலகத்தில் சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்கு வந்தால். ஒரே ஒரு அலுவலர் மட்டும் இருப்பார். அதுவும் அவர் கணினி ணி செய்பவராக இருப்பதால் அவரை மட்டும் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது. எனவே இதுகுறித்து, விவசாயத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு அலுவலகம் திறப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
The post மீஞ்சூரில் பூட்டிக் கிடக்கும் வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலகம்: விவசாயிகள் அவதி appeared first on Dinakaran.