×

உச்ச நீதிமன்றத்திற்கு கூடுதலாக 3 நீதிபதிகள் பதவியேற்பு: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

புதுடெல்லி: கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா , கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய் மற்றும் மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ஏ.எஸ் சந்துர்கர் உள்ளிட்ட மூவரையும் கொலீஜியம் பரிந்துரையின்பேரில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக ஜனாதிபதி திரவுபதி முர்முவால் நியமிக்கப்பட்டனர். இந்தநிலையில் மேற்கண்ட மூன்று நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்ச்சி உச்ச நீதிமன்றத்தில் நேற்று காலை 10.30மணிக்கு நடைபெற்றது.

இவர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பார் கவுன்சில் ஆப் இந்தியா உறுப்பினர்கள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 34ஆக உயர்ந்த என்பது மட்டுமில்லாமல், உச்ச நீதிமன்றம் முழு நீதிபதிகள் அடங்கிய பலத்துடன் செயல்படும் என்பது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

The post உச்ச நீதிமன்றத்திற்கு கூடுதலாக 3 நீதிபதிகள் பதவியேற்பு: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Chief Justice ,PR Kavai ,New Delhi ,Karnataka High Court ,NV ,Anchariya ,Gauhati High Court ,Vijay Bishnoi ,Bombay High Court ,Senior Justice ,Chandurkar ,President ,Draupadi Murmu ,Dinakaran ,
× RELATED நேருவை வெறுப்பது போலவே, மகாத்மா...