- முன்னாள்
- முதல்வர்
- கங்கனா
- காங்கிரஸ்
- புது தில்லி
- முதல் அமைச்சர்
- மண்டி
- மக்களவைத் தேர்தல்
- கங்கனா ரன ut த்
- பாஜக
- ஹிமாச்சல பிரதேசம்
புதுடெல்லி: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் மண்டி தொகுதியில் கங்கனாவுக்கு எதிராக முன்னாள் முதல்வர் மகன் நிறுத்தப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இமாச்சலபிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நடிகை கங்கனா ரனாவத்திற்கு எதிராக முன்னாள் முதல்வர் வீரபத்திரசிங் மகனும், மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் மகனும், தற்போதைய அமைச்சருமான விக்ரமாதித்யா சிங் நிறுத்தப்பட்டுள்ளார். சிம்லா தொகுதியில் வினோத் சுல்தான்புரி நிறுத்தப்பட்டுள்ளார். சண்டிகர் தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி நிறுத்தப்பட்டுள்ளார். இதே போல் குஜராத்தில் 4 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 9 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்து உள்ளது.
The post நடிகை கங்கனாவுக்கு எதிராக முன்னாள் முதல்வர் மகன்: காங்கிரஸ் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.