×

மதுரையில் பெண் கரகாட்டக் கலைஞர் ஒருவர் தனக்கு மற்ற கலைஞர்களிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாக மாவட்ட காவல் துறையிடம் புகார்

மதுரை: மதுரையில் பெண் கரகாட்டக் கலைஞர் ஒருவர் தனக்கு மற்ற கலைஞர்களிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாக மாவட்ட காவல் துறையிடம் புகார் தெரிவித்துள்ளர். பாரம்பரிய கலைகளில் நாம் அனைவருக்கும் பரிச்சயமானது கரகாட்டம், பெரும்பாலும் கோவில் திருவிழாக்களில் சுவாமி ஊர்வலத்தின் போது தலையில் கரகத்தை வைத்துக்கொண்டு லாபகமாக பெண்களும், ஆண்களும் ஆடுவதை அனைவரும் ரசிப்பார்கள், இப்படி தனது காரகடத்தல் கவர்ந்தவர் தான் மதுரை திருமங்கலம் தாண்டியன் நகரை சேர்ந்த பரமேஸ்வரி, மூன்றாண்டுகளுக்கு முன் கணவர் இறந்துவிட்ட நிலையில் தாயாருடன் வசித்து வரும் இவர் பட்டாம்பூச்சி என்ற பெயரில் தனியாக யூடுப் சேனல் தொடங்கி அதில் தனது நடனங்களை பதிவேற்றம் செய்து வருகின்றார்.

இது தவிர பரமேஸ்வரின் ரசிகர்கள், தனியாக முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பழக்கணுக்குகளை தொடங்கி விடீயோக்களை பதிவு செய்து வருகின்றனர். பரமேஸ்வரிக்கு ரசிகரித்து வரும் அதே வேளையில் அவருக்கு எதிரான குரல்கள் எழத்தொடங்கியுள்ளது.பரமேஸ்வரி கரகாட்டத்தை இழிவு படுத்திக்கின்றார் வழக்கத்துக்கு மாறாக ஜாதி கோடியை அணிந்து ஆடுகின்றர், முத்த கலைஞர்களை மதிப்பதில்லை அதனால் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகிறோம் என்று குற்றச்சாட்டுகளை ஆடுகிறார்கள் ஆகில இந்திய கலை குடும்பத்தை சேர்ந்த காரகடக்கலைஞர்கள்.

கொரோனா தொற்றால் இரண்டாண்டு முடங்கி இருந்த நிலையில் மீண்டும் கால்களில் சலங்கைகள் கட்டி தயாராக இருக்கவேண்டிய நேரத்தில் மல்லுக்கட்டிக்கொண்டு இருக்கின்றர்கள் இவர்கள். ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் மறுப்பு தெரிவிக்கிறார் பரமேஸ்வரி, காரகடக்கலையை இழிவுபடுத்தும் எந்த செயலையும் தான் செய்யவில்லை என்றும் பாடல்களுக்கு நடனமாடுவது தாம் வருவதற்கு முன்பே இருந்த நடைமுறை தான் என்றும் கூறுகின்றார்.

தனது வளர்ச்சியை பொறுக்காத சிலர் தொலைபேசியில் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறுகின்றர் பரமேஸ்வரி. தொடர்ந்து மிரட்டல்கள் வந்ததால் மதுரை மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார் பரமேஸ்வரி. கலைஞர்களுக்குள் ஏற்பட்டுள்ள மோதல்கள் விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post மதுரையில் பெண் கரகாட்டக் கலைஞர் ஒருவர் தனக்கு மற்ற கலைஞர்களிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாக மாவட்ட காவல் துறையிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : Madurai ,
× RELATED மதுரை அழகர்கோயில் ஆடித்திருவிழா ஜூலை 13இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!