×

கயிற்றால் கழுத்தை இறுக்கி கணவரை கொன்ற மனைவி: கிணற்றில் குதித்து தற்கொலை

காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அருகே, கயிற்றால் கழுத்தை இறுக்கி கணவரை கொன்ற மனைவி,கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த கரடியள்ளி ஊராட்சி பீமனூர் கூடக்காரச்சி கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (45), எலக்ட்ரீசியன். இவரது மனைவி ஜெயந்தி (36). இவர்களுக்கு சந்தோஷ் என்ற மகன், தீபிகா என்ற மகள் உள்ளனர். சந்தோஷ் கூலி வேலைக்கு சென்று வருகிறார். தீபிகா படித்து வருகிறார். இதனிடையே, கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயந்தி மனஉளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, மகன், மகள் தூங்க சென்று விட்டனர். அதன் பின்னர், கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த ஜெயந்தி, கயிற்றை எடுத்து ரங்கசாமியின் கழுத்தில் போட்டு இறுக்கினார்.

இதில் மூச்சுத்திணறி உயிரிழந்தார். பின்னர், அவரது உடலை அறையில் வைத்து, அதன் மீது துணிகளை போட்டு ஜெயந்தி மூடி மறைத்து வைத்தார். நேற்று காலை எழுந்த மகள் தீபா, அப்பா எங்கே? என கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, அருகேயுள்ள பாட்டி சுசீலாவின் வீட்டுக்கு சென்று தெரிவித்துள்ளார். உடனே ரங்கசாமியின் வீட்டுக்கு வந்த சுசீலா, பேத்தியுடன் சேர்ந்து மகனை தேடியுள்ளார். அப்போது அறையில், ரங்கசாமி சடலம் துணிகளை ெகாண்டு மூடப்பட்டு கிடந்ததை கண்டு அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் ஜெயந்தி அப்பகுதியில் இருந்த 45 அடி ஆழ கிணற்றில் குதித்தார். அக்கம்பக்கத்தினர், அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் நீரில் மூழ்கி ஜெயந்தி உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post கயிற்றால் கழுத்தை இறுக்கி கணவரை கொன்ற மனைவி: கிணற்றில் குதித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kaveripatnam ,Krishnagiri district ,
× RELATED ₹12 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை