×

கரூர் அருகே இன்று அதிகாலை கார் தீப்பிடித்து எரிந்தது: 3 பேர் உயிர் தப்பினர்


கரூர்: கேரள மாநிலம் இடுக்கி செக்குளத்தை சேர்ந்தவர் லட்ச்சு(35). இவர் அந்த பகுதியில் உள்ள கிரானைட் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். வேலை தொடர்பாக மதுரைக்கு 2 பேருடன் லட்ச்சு காரில் நேற்று வந்தார். வேலை முடிந்ததும் மதுரை- சேலம் பைபாஸ் சாலையில் கேரளாவுக்கு இன்று அதிகாலை காரில் புறப்பட்டு சென்றனர். கரூர் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியில் சென்றபோது காரின் முன்பகுதியில் இருந்து புகை வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்து சாலையோரமாக காரை நிறுத்தி விட்டு லட்ச்சு உட்பட 3 பேரும் கீழே இறங்கினர்.

சிறிது நேரத்தில் காரின் முன்பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து கரூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் காரின் இன்ஜின் மற்றும் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. முன்பகுதியில் இருந்து புகை வந்ததும் காரை நிறுத்தி விட்டு இறங்கியதால் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

The post கரூர் அருகே இன்று அதிகாலை கார் தீப்பிடித்து எரிந்தது: 3 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Karur ,Sekkulam, Idukki, Kerala ,Dinakaran ,
× RELATED கரூர் மாநகர பேருந்து நிலையத்தில்...