பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டுவெடிப்புதான் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தகவல் தெரிவித்துள்ளார். “முதற்கட்ட விசாரணையில் மேலோட்டமாக பார்க்கும் போது IED குண்டு வெடிப்பு போல் தெரிகிறது. காவல்துறை முறையான அறிக்கை வழங்கிய பிறகுதான் எந்த தகவலும் தெரிவிக்க முடியும் எனவும் கூறினார். பெங்களூரு ராமேஸ்வரம் கபே உணவகத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் படுகாயமடைந்தனர். ராமேஸ்வரம் கபே உணவகத்தில் வெடிகுண்டு வெடித்தது குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடத்துகிறது
The post உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டுதான்: முதலமைச்சர் சித்தராமையா appeared first on Dinakaran.