×

அமைச்சர் காமராஜ் பேட்டி திருத்துறைப்பூண்டியில் மழையின்போது மின்கம்பம் மீது சாய்ந்த சுவரை அகற்ற கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, டிச.4: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் ரகுராமன் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:திருத்துறைப்பூண்டி நகர் மன்னை சாலை ராஜமாணிக்கம் நாடார் தெருவிற்கு செல்லும் முகப்பு சாலையோரம் இரட்டை மின் கம்ப டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதன் அருகே ரயில்வே காம்பவுண்ட் சுவர் உள்ளது. இந்நிலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக ரயில்வே காம்பவுண்ட் சேதமடைந்து மின்சார கம்பத்தில் விழுந்துள்ளது. இதனால் மின்சார கம்பமும் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே உடனே ரயில்வே நிர்வாகம் மற்றும் மின்சார நிர்வாகம் பாதிப்பு ஏற்படுவதற்கு முன் அகற்றிட வேண்டும். ஏனென்றால் இப்பகுதி மருத்துவமனை, மக்கள் மருந்தகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக இருக்கிறது. எனவே உடனே உயிர்பலி மற்றும் விபத்து ஏற்படுவதற்கு முன் அகற்ற வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : Kamaraj ,
× RELATED அமைச்சர் காமராஜ் உடல்நிலையில் முன்னேற்றம்