×

கொரோனா பலி எண்ணிக்கை திருவாரூரில் 105 ஆக உயர்வு தொற்று 10 ஆயிரத்தை கடந்தது

திருவாரூர், டிச.4: திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவிற்கு சிகிச்சை பலனின்றி 104 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் நேற்று கொரடாச்சேரி தளிப்பன் பேட்டை பகுதியை சேர்ந்த 49 வயது நபர் ஒருவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனையடுத்து மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரையில் 10 ஆயிரத்து 490 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று திருவாரூர் மற்றும் கொரடாச்சேரியில் தலா 2 பேர், மன்னார்குடியில் 5 பேர், குடவாசலில் ஒருவர் என மாவட்டம் முழுவதும் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 509 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Corona ,Thiruvarur ,
× RELATED உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்...