×

கலெக்டருக்கு கோரிக்கை புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக சிஐடியூ தொழிற்சங்கத்தினர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், டிச.4: மத்திய அரசின் வேளாண் திட்டங்களை கண்டித்து திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் 3 அவசர வேளாண் சட்டங்களை கண்டித்தும், இந்த சட்டத்தை ரத்து செய்ய கோரியும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் மற்றும் விவசாயிகளை அழைத்து உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், மின்சார திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் பேரளம் கடைத்தெருவில் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் கிளை தலைவர் மனோகரன் தலைமையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : unions ,Collector Protest ,CITU ,
× RELATED சரிந்து விழும் நிலையில் அச்சுறுத்தும் ‘கூரைசெட்’ : அகற்ற கோரிக்கை