×

திருவண்ணாமலையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் பங்கேற்பு

திருவண்ணாமலை, டிச.3: திருவண்ணாமலையில் உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கலந்து கொண்டார்.ஆண்டு தோறும் டிசம்பர் 1ம் தேதி உலக எயிட்ஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில், கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு பேசியதாவது:எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்கான தொடர் முயற்சியில் தன்னார்வல அமைப்புகள் ஈடுபடவேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 2,71,437 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 234 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிப்பு முற்றிலும் இல்லை என்ற நிலையை அடைவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.அதைத் தொடர்ந்து உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடந்த சமபந்தி விருந்தில் கலந்து கொண்டார். இதில், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மீரா, மாவட்ட சமூக நல அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,Thiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலையில் கிரிவலம்...