×

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக எல்ஐசி அலுவலகத்தை முற்றுகையிட்ட 47 பேர் கைது மாலையில் விடுவிக்கப்பட்டனர்

செய்யாறு, டிச.3: செய்யாறில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக எல்ஐசி அலுவலகத்தை முற்றுகையிட்ட 47 பேரை போலீசார் கைது செய்தனர்.டெல்லியில் புதிய வேளான் சட்டத்தை எதிர்த்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக செய்யாறு- ஆற்காடு சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வட்டார செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். வட்டார குழு உறுப்பினர் வெ.சங்கர் முன்னிலை வகித்தார். முற்றுகை போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த செய்யாறு போலீசார் முற்றுகையில் ஈடுபட்ட 11 பெண்கள் உட்பட 47 பேரை கைது செய்தனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு, மாலையில் விடுவித்தனர்.திருவண்ணாமலை: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் விவசாயத்தையும் சீரழிக்கும் 3 வேளாண் புதிய அவசர சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : LIC ,Delhi ,
× RELATED விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க...