×

தண்டராம்பட்டில் வளர்ச்சிப் பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு

தண்டராம்பட்டு, டிச.3: தண்டராம்பட்டில் வளர்ச்சிப்பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட கல்நாட்டுபுதூர், போந்தை, பி.குயிலம், பெருங்குளத்தூர், இளையாங்கண்ணி ஆகிய கிராமங்களில் குடிநீர் குழாய், பசுமை வீடு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகிய வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது.இதனை மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதில் பிடிஓ கோவிந்தராஜுலு, சம்பத், இன்ஜினியர் பழனிச்சாமி, சவுந்தரராஜன், பணி மேற்பார்வையாளர் தங்கதுரை, ஊராட்சி மன்ற தலைவர்கள் கவிதா ராஜசேகரன், சீனிவாசன், மகாலட்சுமி பாண்டு, ஊராட்சி செயலாளர்கள் குப்புசாமி, கிறிஸ்துவராஜ், ஜான் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Project Director ,
× RELATED ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்