×

போளூர் வசந்தம் நகரில் 2.80 லட்சத்தில் சிமென்ட் சாலை எம்எல்ஏ நேரில் ஆய்வு

போளூர், டிச.3: போளூர் வசந்தம் நகரில் ₹2.80 லட்சத்தில் அமைக்கப்படும் சிமென்ட் சாலை பணியை எம்எல்ஏ கே.வி.சேகரன் ஆய்வு செய்தார்.போளூர் எம்எல்ஏ அலுவலகம் செல்லும் வழியில் உழவர் சந்தை, நிலவள வங்கி, வீட்டு வசதி சங்க அலுவலகம் போன்றவை உள்ளது. மேலும், இந்த சாலை கடந்த சில மாதங்களாக ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளதால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.இதுகுறித்து எம் எல் ஏ கே.வி.சேகரனிடம் அப்பகுதியினர் முறையிட்டனர். அதன்படி எம் எல் ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து ₹2.80 லட்சம் ஒதுக்கி சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியை எம்எல்ஏ கே.வி.சேகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் பொதுக்குழு உறுப்பினர் கோ.சண்முகம், பேருராட்சி முன்னாள் தலைவர் என்.கே.பாபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் என்.நரேஷ்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சி.ராம்மோகன், பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் எம்.பார்த்திபன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags : Cement Road MLA ,Polur Vasantham ,
× RELATED மாவட்டத்தில் வரும் 17ம் தேதி 1154...