×

ஊராட்சி தலைவர்களுக்கு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பயிற்சி

தண்டராம்பட்டு, டிச.3: தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து நேற்று முன்தினம் வட்டார மருத்துவர் செலின் மேரி, பிடிஓ சம்பத் தலைமையில் காணொளி காட்சி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

அப்போது வருகிற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நீரில் மூலம் பரவும் நோய்கள், மழை காலத்தில் நீர் நிலைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும், பொதுமக்களுக்கு தண்ணீரை எவ்வாறு சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்துவதற்கு வழங்க வேண்டும், மழைக்காலங்களில் நோய் பரவாமல் தடுப்பது குறித்து திரை மூலம் விளக்கப்பட்டது.

Tags : Panchayat Leaders ,
× RELATED மீஞ்சூர் ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம்