×

5 கோடியில் முகம், நம்பர் பிளேட்டை படம்பிடித்து ஸ்கேன் செய்யும் அதிநவீன கேமரா குற்றவாளிகள் மின்னல் வேகத்தில் பறந்தாலும் தப்பமுடியாது வேலூர் மாநகராட்சியில் 1,000 இடங்களில்

வேலூர், டிச.3:வேலூர் மாநகராட்சியில் 1,000 இடங்களில் ₹5 கோடியில் பேஸ், நம்பர் பிளேட் ரெகக்னேஷன் கேமரா பொருத்த டெண்டர் விடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மின்னல் வேகத்தில் பறந்தாலும் இனி தப்ப முடியாது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட அனைத்து விதமான குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க போலீசாருக்கு உதவியாக இருப்பது 3வது கண்ணாக விளங்கும் சிசிடிவி கேமராக்கள் தான். தமிழகம் மட்டுமின்றி நாடுமுழுவதும் கண்காணிப்பு கேமராக்களின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. எனவே தான் தற்போது தெருக்கள், கடைகள், வணிகவளாகங்கள் என்று கேமராக்கள் அதிகளவில் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் வேலூர் மாவட்டத்திலும் குற்றசம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் வேலூர் மாநகராட்சி பகுதிகளிலும் காவல்துறை சார்பில் பெரும்பாலான தெருக்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

இந்நிலையில் வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ₹5 கோடியில் வேலூர் வடக்கு, வேலூர் தெற்கு, சத்துவாச்சாரி, விருதம்பட்டு உள்ளிட்ட காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இதற்காக மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் குற்றவாளிகளை படம் பிடித்து, சம்மந்தப்பட்ட காவல்நிலையங்களுக்கு அனுப்பிவிடும். நம்பர் பிளேட்களும் ஸ்கேன் செய்துகொள்ளும். இப்படி மிகவும் லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் கூடிய கேமராக்கள் மாநகராட்சி பகுதிகளில் பொருத்தப்படுகிறது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் மாநகராட்சியில் ஏற்கனவே காவல்துறை சார்பில் பல்வேறு இடங்களில் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், அதிநவீன கேமராக்கள் ₹5 கோடியில் 1,000 இடங்களில் வைக்கப்பட உள்ளது. இதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் பேஸ், நம்பர் பிளேட் ெரகக்னேஷன் செய்யக்கூடியது.

அதாவது, குற்றவாளிகளின் முகத்தை படம் பிடித்து, நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்துவிடும். இதனால், வேலூர் மாநகராட்சி பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை, விபத்து போன்ற சம்பவங்கள் நிகழ்த்திவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றாலும் ஒரு நொடியில் பதிவு செய்து கொள்ளும். அந்த அளவிற்கு அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இவ்வாறு கூறினர்.

Tags : camera criminals ,places ,Vellore Corporation ,
× RELATED உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட் எளிமையான நடைமுறையில் விண்ணப்பம் செய்யலாம்