×

திருச்சியில் 2 இடங்களில்

திருச்சி, டிச.3: தமிழக காவல்துறையில் கடந்தாண்டு காவலர் தேர்வு முகாம் நடந்தது. தமிழத்தில் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் திருச்சியில் தேர்வான காவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் திருச்சி அடுத்துள்ள நவல்பட்டு, மன்னார்புரம் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணி ஆகியவற்றில் நடத்தப்பட்டது. இந்நிலையில் தேர்வானவர்களுக்கு ெகாரோனா ஊரடங்கிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பயிற்சி முடித்த காவலர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நேற்று முன்தினம் நடந்தது.

திருச்சி அடுத்துள்ள நவல்பட்டு காவலர் பயிற்சி மையத்தில் நடந்த புதிய காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை திருச்சி மாநகர கமிஷனர் லோகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திறந்த ஜீப்பில் சென்று ஏற்றுக்கொண்டார்.
அதை தொடர்ந்து காவலர்களின் கலை நிகழ்ச்சிகள், வீரதீர நிகழ்ச்சிகள், கராத்தே உள்ளிட்டவைகள் நடந்தது. தொடர்ந்து பயிற்சியின்போது சிறப்பாக அனைத்து வகுப்பிலும் அதிக மதிப்பெண் எடுத்த காவலர்களுக்கு மெடல் அணிவித்தும், சான்றிதழ் வழங்கியும் பாராட்டினார்.

இந்த பயிற்சி நிறைவு அணிவகுப்பில் 150 காவலர்கள் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து, 150 காவலர்களில் 75 பேர் மாநகர ஆயுதப்படையிலும், மீதமுள்ள 75 பேர் காவல் நிலையங்களிலும் களப்பயிற்சியில் ஈடுபடுவார்கள். இதை தொடர்ந்து எ.புதூர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலணியில் நடந்த அணிவகுப்பில் மத்திய மண்டல ஐஜி ஜெயராம் கலந்துகொண்டு காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் இங்கு 512 காவலர்கள் பயிற்சி முடித்து காவல் நிலையங்களுக்கு பணிக்கு செல்ல உள்ளனர். இந்த இரு நிகழ்ச்சிகளிலும் காவலர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

Tags : places ,Trichy ,
× RELATED வெவ்வேறு இடங்களில் திருமணமான 2 பெண்கள் மாயம்