×

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் மறியல்

திருச்சி, டிச.3: மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500 பேர் கைது செய்யப்பட்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1000த்தை உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் துறையில் வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடந்தது. மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநகர் மாவட்ட செயலாளர் கோபிநாத் தலைமை வகித்தார். இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தை 500 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Tags : protest ,Trichy ,
× RELATED கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்