×

மாநகர கமிஷனரிடம் புகார் திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் மைனர் பெண் இருவரை கடத்தி ெசன்று திருமணம் 2 வாலிபர்கள் போக்சோவில் கைது


திருச்சி, டிச.3: திருச்சி ரங்கம் அம்மாமண்டபம் குஜிலியம்ேதாப்பை சேர்ந்தவர் 16 வயதான பிளஸ் 1 மாணவி. கடந்த 20ம் தேதி வெளியே சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் தாய் ரங்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் ரங்கம் கீழத்தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி குணசேகரன்(23) என்பவர் மாணவியை அழைத்து சென்று திருமணம் செய்து திருப்பூரில் உள்ள நண்பர் வீட்டில் ைவத்திருந்தது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் குணசேகரனை கைது செய்தனர். மேலும் மாணவியை அழைத்து திருச்சி வந்து மருத்துவ பரிசோதனை நடத்தினர். தொடர்ந்து ரங்கம் மகளிர் போலீசார் குணசேகரனை போக்சோ மற்றும் குழந்தை திருமணம் ஆகிய பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மற்றொரு சம்பவம்: தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவர் பழநி அருகே உள்ள மில்லில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி சொந்த ஊர் செல்வதற்காக தாயுடன் பழநியில் இருந்து திருச்சி வந்தார். இங்கு மத்திய பஸ் நிலையத்தில் மாயமானார். இது குறித்து தாய் கன்டோன்மென்ட் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் மில்லில் அவருடன் வேலை பார்த்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மதன்குமார்(21) என்பவர், அவர்கள் வந்த பஸ்சில் பின் தொடர்ந்து வந்து, மத்திய பஸ் நிலையத்தில் இருந்து அவரை அழைத்து சென்று திருமணம் ெசய்து சொந்த ஊரில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மதன்குமாரை கைது செய்து, மாணவியுடன் திருச்சி வந்தனர். தொடர்ந்து மாணவியை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தினர். கன்டோன்மென்ட் மகளிர் போலீசார் மதன்குமாரை போக்சோ மற்றும் குழந்தை திருமணம் ஆகிய பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : teenagers ,Municipal Commissioner Two ,incidents ,Trichy ,girls ,
× RELATED கலெக்டர் தகவல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு