×

4 பேர் டிஸ்சார்ஜ்

திருச்சி, டிச.3: திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.
ரங்கம் அரசு மருத்துவமனையில் திருச்சி, டிச.3: ரங்கம் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. ரங்கம் அரசு மருத்துவமனையில், நாளை (4ம் தேதி) நடைபெறும் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாமில் பங்கு பெறும் ஆண்களுக்கு அரசு வழங்கும் ஈட்டுத்தொகை ரூ.1,100 வழங்கப்படும். ஓரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் அறுவை சிகிச்சை செய்யப்படும். அறுவை சிகிச்சைக்கு பின்பு மருத்துவமனையில் தங்கவேண்டியதில்லை. சிகிச்சை முடிந்த பிறகு வீட்டிற்கு செல்லலாம். கத்தியின்றி, ரத்த சேதமின்றி, தையல், தழும்புமின்றி செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சையால் பின் விளைவுகள் ஏதும் இருக்காது. எனவே, விருப்பமுள்ள ஆண்கள் இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED 4 பேருக்கு கொரோனா பாதிப்பு