×

அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளையொட்டி ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு அன்னதானம்

மணப்பாறை, டிச.3: அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்த நாளையொட்டி இளைஞரணி சார்பில் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாள் நேற்று வையம்பட்டி பகுதியில் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் பெர்னாட் சாமிநாதன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக முள்ளிப்பாடியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பெர்னாட் சாமிநாதன் மற்றும் செக்கனம் முன்னாள் ஊராட்சி தலைவர் இன்னாசி ஆகியோர் குழந்தைகளுக்கு பிரியாணியை பரிமாறினர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணதாசன், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் வீரமணி, கருங்குளம் கிளை பிரதிநிதி ஜெயசீலன், தகவல் தொழில்நுட்ப அணி மரிய ஆரோக்கியராஜ், ஒன்றிய ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் சுப்ரமணி, கருங்குளம் கிளைச் செயலாளர் கென்னடி அருள்ராஜ், அமயபுரம் ஊராட்சி தகவல் தொழில்நுட்ப அணி அழகர் உள்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக ஆதரவற்றோர் இல்லத்தில் மும்மத பிரார்த்தனை நடந்தது.

Tags : Mahesh Poyamozhi ,Anbil ,children ,birthday ,
× RELATED 3.41 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து