×

கொட்டும் மழையில் தொடர் போராட்டம் குழப்பம் ஏற்படும் என அச்சம் முகாமில் தங்கியிருந்த 18 ஆயிரம் பேருக்கு 8,000 நிவாரண பெட்டிகள் ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு கண்டனம்


திருத்துறைப்பூண்டி, டிச.3: திருத்துறைப்பூண்டி தாலுகாவில் நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக 129 முகாம்களில் வருவாய்துறை கணக்கெடுப்பின்படி 18 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினர். இந்நிலையில் முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்கு 8 ஆயிரம் நிவாரணப் பெட்டிகள் மட்டும் வந்துள்ளது. இந்த நிவாரண பெட்டிகள் ஒவ்வொரு ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்றால் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் வீரசேகரன் கூறுகையில், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஒன்றியத்தில் முகாமில் தங்கியிருந்த 18பேரில் பேரில் 8000 பேர்களுக்கும் மட்டும் நிவாரண பெட்டிகள் வந்துள்ளது என்று வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர். இப்பொழுது வந்துள்ள நிவாரண பெட்டிகளை வழங்கினால் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும், குறிப்பாக ஆதிரெங்கம் ஊராட்சியில் 800 பேர் முகாமில் தங்கியிருந்தனர். ஆனால் வந்துள்ள நிவாரண பெட்டிகள் 30 தான். இதுபோன்றுதான் அனைத்து ஊராட்சிகளின் நிலைமை ஆகும்.

பொதுமக்களுக்கு எத்தனை பெட்டிகள் வந்துள்ளது என்று தெரியாது. புரிய வைக்கவும் முடியாது. இதனால் உள்ளாட்சி அமைப்புபிரதிகள் பொதுமக்களை சந்திக்க முடியாது, இதனால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தும். எனவே வருவாய்த்துறை கணக்கெடுப்பின்படி முகாமில் தங்கி இருந்த அனைவருக்கும் நிவாரண பெட்டிகள் வழங்க வேண்டும் என்றார். இதுகுறித்து விஏஒ சங்க வட்ட தலைவர் மூர்த்தி கூறிகையில், முகாமில் தங்கியிருந்த கணக்கின்படி நிவாரண பெட்டிகள் வரவில்லை. இதனை வழங்கினால் பெரும் குழப்பம் ஏற்படும். கிராம நிர்வாக அலுவலர்களால் இதனை வழங்க முடியாது என்பதை மாவட்ட விஏஓ சங்கம் மூலம் தாசில்தாரிடம் தெரிவித்துவிட்டோம், என்றாலும் மாவட்ட சங்கம் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்பட்டு பணிசெய்வோம் என்றார்.

Tags : Federation ,President ,camp ,protests ,
× RELATED தனியார் பள்ளி கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்