×

கீழ்வேளூர் காவல் நிலையத்தில் தஞ்சை சரக டிஐஜி ஆய்வு

கீழ்வேளூர், டிச.3: .நாகை மாவட்டம் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. ரூபேஸ்குமார்மீனா ஆய்வு மேற்கொள்ள கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு வருகை தந்தார். அவரை நாகை எஸ்.பி. ஓம்பிரகாமீனா வரவேற்றார். அதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் உள்ள கோப்புகள் மற்றும் குற்ற வழக்குகள் ஆவணங்களை ஆய்வு செய்தார். பின்னர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை பெற்றார். அதைத் தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். ஆய்வின்போது கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர்கள் கலியபெருமாள், மோகன்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : inspection ,Tanjore Goods DIG ,Lower Vellore Police Station ,
× RELATED பள்ளிகளில் பொறுப்பு அலுவலர் ஆய்வு