×

சோகத்தில் மூழ்கிய கிராமம் மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோதபோக்கை கண்டித்து எல்ஐசி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

குளித்தலை, டிச.3: மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோத போக்குகண்டித்து குளித்தலையில் எல்ஐசி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோத போக்கை கண்டிப்பது விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வேளாண்மை திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் அத்தியாவசியப் பொருட்களின் சட்டத்தை திருத்த கூடாது. விவசாயத்தை பாதிக்கும் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை கைவிட வேண்டும். விவசாய பொருட்களுக்கு நியாயமான விலையை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் டெல்லியில் வேளாண் சட்டத்தை எதிர்த்து நடைபெற்று வரும் அனைத்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க குளித்தலை கிளை சங்கம் சார்பில் உணவு இடை வேளையில் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை சங்கத்தலைவர் எத்திராஜ் தலைமை வகித்தார். பிரதிநிதி சிவகுமார் முன்னிலை வகித்தார். இதில் எல்ஐசி ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : protests ,LIC Employees Union ,governments ,state ,
× RELATED சென்னையில் திமுகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !