×

56 பேர் கைது மழை, பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அரவக்குறிச்சியில் கம்பளி ஆடைகள் விற்பனை மும்முரம்

அரவக்குறிச்சி. டிச. 3: அரவக்குறிச்சி பகுதியில் மழை மற்றும் பனியின் காரணமாக உல்லன் கம்பளி உள்ளிட்ட பனிக்கால ஆடைகள் விற்பனை ஆரம்பித்து மும்முரமாக நடை பெறுகின்றது. இளைஞர்கள் சைக்கிள் மற்றும் பைக்கில் சென்று விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். தற்போது பெய்யும் தொடர் மழை மற்றும் பனிக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில். மாலையிலேயே குளிர் ஆரம்பித்து இரவில் குளிர் அதிகமாகி, காலை 8 மணி வரை நீடிக்கின்றது. இதனால் அதிகாலை வேலைக்கு செல்பவர்கள், பால்காரர்கள் உள்ளிட்ட பொது மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்துள்ளது. இந்த குளிரிலிருந்து தப்பிப்பதற்கு பாதுகாப்பு மாற்று வழியாக உல்லன் கம்பளி, சால்வை, ஸ்வெட்டர், காதுகளைப் பாதுகாக்கும் உல்லன் தலைக்கவசம் உள்ளிட்ட பனிக்கால ஆடைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்குகின்றனர். இதனால் ஜவுளி கடைகளில் பனிக்கால ஆடைகள் விற்பனை ஆரம்பித்து அதிகரித்து வருகின்றது.

இதில் உல்லன் கம்பளிகளை மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து மொத்தமாக கொண்டு வந்து அரவக்குறிச்சியில் ஸ்டாக் வைத்துக் கொண்டு சைக்கிள் மற்றும் பைக் மூலம் கிராமங்கள் உள்ளிட்ட அரவக்குறிச்சியின் சுற்றுப்பகுதியில் விற்பனை செய்கின்றனர். இது தொடர்பாக மகாராஷ்டராவைச் சேர்ந்த உல்லன் கம்பளி விற்பனை செய்யும் இளைஞர் கூறியதாவது, நாங்கள் இளைஞர்கள் 20 பேர் சேர்ந்து மகாராஷ்டராவிலிருந்து மொத்தமாக வாங்கி வந்து ஆண்டு தோறும் பனிக்காலங்களில் இப்பகுதியில் தங்கி விற்பனை செய்வோம். பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். ரூ 100 முதல் 500 ரூபாய் வரை எங்களிடம் பல்வேறு ரகங்கள் உல்லன் கம்பளி மற்றும் போர்வைகள் இருக்கின்றது. சீசன் விற்பனையின் காரணமாக எங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கின்றது என்றனர்.

Tags : Aravakurichi ,
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...