×

கரூர் இரட்டை வாய்க்காலில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர், டிச. 3: கரூர் நகரின் வழியாக செல்லும் இரட்டை வாய்க்காலின் படர்ந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகரின் வழியாக இரட்டை வாய்க்கால் செல்கிறது. பெரும்பாலும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளின் வழியாக இந்த வாய்க்கால் செல்கிறது. இதில், பல்வேறு பகுதிகளில் வாய்க்காலின் போக்கை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் வாய்க்கால் நீர் தேங்கி பல்வேறு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் சென்று வருகிறது. எனவே, நகரின் வழியாக செல்லும் இந்த வாய்க்காலில் படர்ந்துள்ள அனைத்து கழிவுகளையும் அகற்ற தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karur ,
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்