×

நாளை கரூர் பசுபதீஸ்வரா கோயில் கும்பாபிஷேகம் மக்கள் நேரில் வருவதை தவிர்த்து தொலைக்காட்சியில் பார்க்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

கரூர், டிச. 3: கரூர் பசுபதீஸ்வரா கோயில் கும்பாபிஷேகத்துக்கு நேரிடையாக வருவதை தவிர்த்து, தொலைக்காட்சிகளில் பார்க்க வேண்டும் என கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கரூர் நகரில் அமைந்துள்ள கல்யாண பசுபதீஸ்வரா கோயில் குடமுழுக்கு விழா நாளை (4ம்தேதி) நடைபெறுகிறது. பொதுமக்கள் கொரனோ பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். டிசம்பர் 4ம்தேதி முதல் ஆகம விதிப்படி நிகழ்ச்சிகள் மற்றும் 48 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜைகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் கோவிலுக்கு வருவதை தவிர்த்து தங்கள் வீட்டிலேயே இருந்து அதனை பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 10வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் கோயிலுக்குள் செல்ல கண்டிப்பாக அனுமதி மறுக்கப்படுகிறது. கொரனோ பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Karur Pasupathiswara Temple Kumbabhishekam ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...